ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதி சென்னையைச் சேர்ந்த மூவர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதியதில் சென்னையைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதயதில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
ராஜபாளையம், முத்துக்கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜா மனைவி பங்கஜம் (55). இவரது மகள் சத்தியவதி. இவருக்கும் களியக்காவிளை, அப்புக்குட்டன் நாயர் மகன் சுனில்குமார் (43) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் சென்னை கே.கே. நகரில் குடியிருந்து வருகிறார்கள். சுனில்குமார் கட்டுமானத் தொழில் செய்து வந்துள்ளார்.
ராஜபாளையம் தர்மலிங்கராஜா மகன் ஹரிஹரன் (22). இவர் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்துள்ளார். ஒரு திருணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்திருந்துள்ளார். மேலும் இவர் பங்கஜத்தின் தங்கை மகன் ஆவார்.
பங்கஜம், சுனில்குமார், ஹரிஹரன் ஆகிய மூவரும் ஒரு காரில் திங்கள்கிழமை ராஜபாளையத்தில் நடைபெற இருந்த தேசிங்குராஜா பேரன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்துள்ளனர். காரை சென்னை, புது அம்பத்தூர், ஜெயக்குமார் மகன் ஸ்ரீனிவாசன் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி விலக்கு அருகே கார் வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் பங்கஜம், சுனில்குமார், ஹரிஹரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் ஸ்ரீனிவாசன் காயம் அடைந்தார்.
இது குறித்து ராஜபாளையம், ஐ.என்.டி.யூ.சி. நகர், பி.ராஜாகிருஷ்ணன் (42) என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீனிவாசனை கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...