கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவிலிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

News image
Updated On :4 டிசம்பர் 2012, 12:00 pm

கோ.ஜெயக்குமார்

கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் பார்மஸி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியை நகர் பெரிய மாரியம்மன்கோயில் முன்பு கல்லூரி முதல்வர் பேராசிரியர் மா.பழனிவேலு தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் என்.ஜெகன் வரவேற்றார்.

பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து வடக்கு ரத வீதியில் முடிவடைந்தது. மேலும் பேரணியில் கல்லூரி சார்பில் எய்டஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. பேரணியில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.