கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மகாதேவ அஷ்டமி: சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக்கடன்

மகாதேவ அஷ்டமியை ஒட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அன்னதானத்தை அடுத்து பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

News image
Updated On :6 டிசம்பர் 2012, 12:02 pm

கோ.ஜெயக்குமார்

மகாதேவ அஷ்டமியை ஒட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அன்னதானத்தை அடுத்து பக்தர்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கார்த்திகை மாதம் வரும் அமாவாசைக்கு முந்தைய அஷ்டமியை மகாதேவ அஷ்டமி அல்லது வைக்கத்து அஷ்டமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் பக்தர்களுடன் அமர்ந்து இறைவன் சாப்பிடுவதாக ஐதீகம். இறைவன் சாப்பிட்ட இலையில் உருண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம், ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும். வியாழக்கிழமை அதிகாலை அம்பாளுக்கு ருத்ர ஜபம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் சாப்பிட்ட இலையில் நோய் தீரவும், குழந்தைப் பேறு வேண்டியும் பிரார்த்தனை செய்து கொண்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மகாதேவ அஷ்டமி அன்னதான டிரஸ்டின் பொறுப்பாளர் எல்.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.