விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் வீட்டில் போய் அத்துமீறி நுழைந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கிருஷ்ணன்கோவில், எழில் நகரைச் சேர்ந்தவர் பா.தேவராஜ் (59). இவரது மகள் ஸ்டெல்லாவை, ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிஷோர்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து இருவருக்கிடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தேவராஜும் அவரது மனைவியும் வீட்டில் இருக்கும்போது, கிஷோர்குமார் மற்றும் இருவர் வீட்டினுள் கடப்பாறையுடன் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாக பேசி, கடப்பாறையைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். மேலும் வீட்டின் கதவு, ஜன்னல், மின் மீட்டர், மின்பெட்டி, டியூப்லைட்கள் முதலியவற்றை உடைத்து சேதப்படுத்தினார்களாம்.இது குறித்து தேவராஜ் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கிஷோர்குமார் உள்ளிட்ட மூவரை தேடி வருகிறார்கள்.