கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2012, 12:24 pm

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம்(AITUC)சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்க தலைவரை பழிவாங்கும் நோக்குடன் செயல்படும் கிளை மேலாளரை கண்டத்தும், தொழிற்சங்க பாகுபாடு பார்த்து தொழிலாளியை வண்டி இறக்கம் செய்வதைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மினிபஸ் இயக்கத்தை கட்டுப்படுத்தி அரசு பஸ்கள் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தலைவர் வி.சோழபாண்டியன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தி.ராமசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வெ.அழகிரிசாமி, வி.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.