தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கடலூர் அருகே வானமாதேவியில் 144 தடை உத்தரவு

கடலூர் திருவந்திபுரம் அருகே வானமாதேவி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாசி மகத்தின் போது சாமி ஊர்வலம் நடை பெறும். கடந்த காலங்களில் இந்த விழாவின் போது இரு பிரிவினருக்கும்

Updated On :24 பிப்ரவரி 2013, 11:28 am

கோயில் திருவிழா நடத்ததுவதில் இருபிரிவினருக்கிடையே சுமூக உடன்பாடு ஏற்படாததால் வானமாதேவி கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலூர் திருவந்திபுரம் அருகே வானமாதேவி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாசி மகத்தின் போது சாமி ஊர்வலம் நடை பெறும். கடந்த காலங்களில் இந்த விழாவின் போது இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மகத் திரு விழா சுமூகமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலூர் கோட்டாட்சியர் இரா.லலிதா தலைமையில் கடந்த இரு நாட்களாக அந்த கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினர்களையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்படிக்கை ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், மாவட்ட எஸ்பி அ.ராதிகா உத்தரவின் பேரில் கடலூர் கோட்டாட்சியர் இரா.லலிதா, வானமாதேவி கிராமத்தில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.

அதன்படி அக்கிராமத்தில் சுமூகமாக சுவாமி திருவிழா நடைபெறும். அதனை தவிர்த்து எவ்வித ஊர்வலங்களும் நடத்தக்கூடாது. 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யார் முயற்சித்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆயுதங்களை யாரும் வைத்திருக்கக்கூடாது. அனைவரும் அமைதியுடன் சட்டம்,ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இந்த தடை உத்தரவு 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் அமுலில் இருக்கும் என கோட்டாட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.