கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.சந்திரபிரபா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2016, 8:46 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மு.சந்திரபிரபா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் கடந்த இரு சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத் தொகுதி ஒதுக்கப்பட்டு அவர்கள் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அதிமுக வேட்பாளர் நேரடியாக போட்டியிடுவது கட்சித் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளராக தற்போது மாவட்ட கவுன்சிலராக உள்ள த.முத்தையாவின் மனைவி சந்திரபிரபா அறிவிக்கப்பட்டவுடன், அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆரம்பித்துவிட்டனர். மேலும் ஒவ்வொரு கிராமங்களாகச் சென்று பல்வேறு சமுதாயத் தலைவர்களை சந்தித்து ஆதரவு சேகரித்து வருகிறார்கள்.

கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், தொகுதி செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் கருமாரி எஸ்.முருகன், மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்கிழமை அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர் சந்திரபிரபா, தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு கடந்த ஆட்சியில் செயல்படுத்தியுள்ள நலத் திட்டங்கள், தொகுதிக்கும் மாவட்டத்திற்கும் செய்துள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் தமிழகம் மேலும் வளமான வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தொடர அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது உடன் கட்சியின் கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.