ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி வழக்குரைஞர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதியதில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதியதில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேலரதவீதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் மு.சிவக்குமார் (44). திருமணம் ஆன இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. இன்று இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மடவார்வளாகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ராஜபாளையம் நோக்கிச் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வழக்குரைஞர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம், பெரிய வடகரையைச் சேர்ந்த இதயத்துல்லா(48) என்பவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...