கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சதுரகிரி வரும் பக்தர்கள் தங்க சமுதாயக் கூடம் அமைத்துத் தர முதல்வருக்கு கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு தமிழக அரசு சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும்

News image
Updated On :21 ஜூலை 2016, 1:34 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.தமிழகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு தமிழக அரசு சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வியாழக்கிழமை அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து வனத்துறை மூலம் தற்போது சிறிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆடி அமாவாசைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வழியாக சதுரகிரி மலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் அனைத்து மாதங்களிலும் சிறப்பு நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இப் பகுதியில் திடீரென மழை பெய்துவிட்டாலோ, அதிக வெயிலில் சற்று ஓய்வு எடுத்துச் செல்லவோ இடம் கிடையாது. எனவே சுமார் 10 ஆயிரம் பேர் தங்குவதற்கு வசதியாக தாணிப்பாறை, மந்தித்தோப்பு, வண்டிப்பண்ணை பகுதியில் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும்.

மேலும் திடீர் மழையினால் பக்தர்கள் பாதிக்கப்படாவண்ணம் குதிரை ஊற்று, சங்கிலிப்பாறை, நாவல் ஊற்று, பிளாவடி கருப்பசாமி கோவில் பகுதிகளில் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.பக்தர்களின் பாதுகாப்பிற்காக தணிப்பாறையில் நிரந்தரமாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என காமராஜ் அம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.