கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்டு 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஜூலை 2016, 12:08 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்டு 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு கொடியேற்றம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சா.ராமராஜா ஆகியோர் முன்னிலையில் ரகுராமபட்டர் கொடியேற்றினார்.உற்சவ நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமிகள் மண்டபங்களில்எழுந்தருளி அருள்பாலிப்பார்.

மேலும் கோவில் சன்னதியில் மாலையில் தினமும் பல்வேறு ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் நடைபெறும்.ஐந்தாம் திருநாளான 1.8.16-ம் தேதி காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெறுகிறது.

அப்போது ஆடிப்பூர பந்தலுக்கு ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளி ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகள் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு ஐந்து கெருட சேவை நடைபெறும். ஏழாம் திருநாளான 3.8.16-ம் தேதி இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறும். ஒன்பதாம் திருநாளான 5.8.16-ம் தேதி காலை 8.05 மணிக்கு திருதேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோட்ட நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சா.ராமராஜா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.