கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தனியார்

News image
Updated On :26 ஜூன் 2016, 9:27 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் தனியார் உணவகம் சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி தலைமையில், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா தொடங்கி வைத்தார்.மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், நிலவள வங்கித் தலைவர் சிந்து முருகன், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் சரோஜா நடராஜன், அக்ரோ சர்வீஸ் தலைவர் கருமாரி எஸ்.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாமில் 270 நோயாளிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் கண்விழித்திரை பரிசோதனை நடத்தினர்.முகாமிற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினர் பி.அங்குராஜ், அரிமா சங்கத்தின் ஜாகீர் உசேன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.