கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம்: இரு மாவோயிஸ்டுகள் காவல் நீட்டிப்பு

மோசடியாக சிம் கார்டுகள் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள இரு மாவோயிஸ்டுகளின்

News image
Updated On :8 அக்டோபர் 2016, 5:20 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.

மோசடியாக சிம் கார்டுகள் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள இரு மாவோயிஸ்டுகளின் நீதிமன்ற காவல் 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாததால் இவர்களின் காவலை நீட்டிக்கக் கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு மாவோயிஸ்டுகளுக்கும் மேலும் 45 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கேரளா மாநிலம், திருச்சூர், வளப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் ருபேஸ் மனைவி சைனா (எ) சைனி (எ) சோபா (எ) ராஜூ (42). இவர் கேரளா மாநில நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக பணிபுரிந்தவர். இவரது கணவர் மவோயிஸ்ட் இயக்கத்தில் கமாண்டர். ராஜூயும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். 

கேரளா மாநிலம் குழிபரம்பில் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் அனூப் மேத்யூ ஜார்ஜ் (32). இவர்கள் இருவரும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-ன் படி கைது செய்யப்பட்டு கோயமுத்தூர் மத்திய சிறையில் உள்ளார்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, குட்டிஅனைஞ்சான் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் ஸ்கோரிங் தொழில் செய்து வருகிறார். 2008-ம் ஆண்டு சிவகாசி பத்திரகாளியம்மன்கோவில் அருகேயுள்ள ஸ்ரீஹரிணி மொபைல் மற்றும் சர்வீஸ் என்ற கடையில் தனது குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் கைப்பமிட்டு இரு டாடா டொக்கமோ சிம்கார்டுகள் வாங்கி இன்று வரை பயன்படுத்தி வருகிறார். 

போலீஸார் இவரது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்து இவரது குடும்ப அட்டை, கையொப்பம், மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இரு மவோயிஸ்டுகள் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

கடையில் நம்பிக்கையாகக் கொடுத்த குடும்ப அட்டை நகல், போட்டோ, கையொப்பத்தை போலியாக யாரோ சமூக விரோதிகளுக்கு தெரிவித்துள்ளதாக சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கோவை மாவட்ட க்யூ பிரிவு போலீஸார் வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் இருக்கும் சைனா (எ) சைனி (எ) சோபா (எ) ராஜூ, அனூப் மேத்யூ ஜார்ஜ் ஆகிய இருவரும் இந்த சிம்கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் வழக்கில் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்துவிடும். 12.10.16-ம் தேதி இவர்களின் 90 நாள் காவல் நிறைவடைகிறது. 

இதனையடுத்து திருச்சி கோட்டை குற்ற சரகம், காவல் உதவி ஆணையாளர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். மாவோயிஸ்டுகள் இருவர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967-ன் படி குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டி, இதர ஆவணங்கள் பெற வேண்டியுள்ளதால் இவர்களுக்கு மேலும் 90 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்ய உத்தரவிட கோரியிருந்தார். 

மனுவை முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி விசாரித்து, மாவோயிஸ்டுகள் இருவருக்கும் 45 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்டுகள் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவோயிஸ்டு ஆதரவு கோஷங்களை இவர்கள் எழுப்பியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.