கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி நாளை பங்கேற்பு

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :16 நவம்பர் 2020, 11:40 am

ANI

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், நாளை காணொளி மூலம் நடைபெற உள்ள  12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார்.

மேலும் இந்த மாநாட்டில், கரோனா தொற்று, உலகளாவிய முக்கிய பிரச்னைகள் போன்றவற்றை குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். 

நாளை நடைபெறும் 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா சாா்பில் அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.