நிதீஷ் குமார் பதவியேற்பு: மோடி வாழ்த்து
பிகார் முதல்வராக நிதீஷ் குமார் 7-வது முறையாக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்ற நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பிகார் முதல்வராக நிதீஷ் குமார் 7-வது முறையாக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்ற நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தக் கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்த போதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமாரே முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பிகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பாகு சௌஹான் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், நிதீஷ் குமார் தொடர்ச்சியாக 4-வது முறையாக பிகார் முதல்வராகியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, பிகாரின் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி தெரிவித்த வாழ்த்து செய்தியில்,
“பிகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். பிகாரின் முன்னேற்றத்திற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும்.
மேலும் பிகார் நலனுக்காக மத்திய அரசால் முடிந்த அனைத்து ஆதரவையும் தருவதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என வாழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...