தருண் கோகோய் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த தருண் கோகோய், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளுக்காக குவாஹட்டியில் சிகிச்சையில் பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், திங்கள்கிழமை மாலை காலமானார்.
கோகோய் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மோடி வெளியிட்ட செய்தியில்,
“தருண் கோகோய் மூத்த தலைவராகவும், மூத்த நிர்வாகியாகவும் இருந்தவர், அவர் அசாம் மற்றும் மத்திய அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அவரது மறைவால் ஆழ்ந்த சோகத்தில் உள்ள குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு உறுதுணையாக உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...