சிறப்புச் செய்திகள்
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்
கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
கரோனா: இந்தியாவில் 50 ஆயிரத்தைத் தாண்டிய பலி எண்ணிக்கை
இந்தியாவில் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
ஆந்திரத்தில் 8,012, கர்நாடகத்தில் 7,040 பேருக்கு கரோனா
ஆந்திரத்தில் புதிதாக 8,012 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 7,040 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் 20 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 11,111 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,754 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 4,754 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கரோனா: மேலும் 125 பேர் பலி
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று; பாதிப்பு 9,22,853 ஆக அதிகரிப்பு
ரஷியாவில் புதிதாக 4,969 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,22,853 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்தது: பலி 49,036 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் மேலும் 60,600 பேருக்கு தொற்று; பலி 1,71,535 ஆக உயர்வு
உலகம் முழுவதும் 2.13 கோடி பேர் பாதிப்பு; பலி 7,63,387 ஆக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,13,57,890 கோடியை கடந்தது.
சென்னையில் 1,179, பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) 4,681 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கரோனா: மேலும் 127 பேர் பலி
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பிகாரில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
பிகாரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
ஒடிசாவில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி
புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,977 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் ஒரேநாளில் 60,091 பேருக்கு தொற்று; 1,261 பேர் பலி
பிரேசிலில் புதிதாக 60,091 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 32,24,876 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பது 10% பேர் மட்டுமே
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு 24 லட்சத்தை கடந்தது: பலி 48,040 ஆக அதிகரிப்பு
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24 லட்சத்து 61ஆயிரத்து 191 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 48,040 -ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 64,553 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1007 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 48,040-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய்த்தொற்றுக்காக 6,61,595 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.17,51,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை 2,76,94,416 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 8,48,728 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு: 24,61,191
பலி: 48,040
குணமடைந்தோர்: 17,51,556
சிகிச்சை பெற்று வருவோா்: 6,61,595
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா; 364 பேர் பலி
இந்தியாவில் கரோனா வைரஸ் அண்மை தினங்களாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 12,608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கரோனா தொற்று
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 147 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவல் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 11,920ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று
கேரள மாநிலத்தில் புதிதாக 1,569 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,094ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1,187 பேர்; பிறமாவட்டங்களில் 4,703 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு விவரம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று 4,703 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 117 பேர் பலி
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 5,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வெளிநாடு, வெளிமாநிலத்திலிருந்து வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும்: தமிழக அரசு
வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதல்வர் பழனிசாமி
முக்கிய பணிகளுக்காக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கோழிக்கோடு விமான விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கரோனா
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வீட்டில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு பெட்டகம்: முதல்வர் வழங்கினார்
லேசான அறிகுறியுடன் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் கரோனா நோயாளிகளுக்கு குறைந்த விலையில் சிறப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு தொற்று; 15,962 பேர் சிகிச்சையில் உள்ளனர்
பாகிஸ்தானில் புதிதாக 626 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,87,300 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
தேர்தல் 1967 : அரியணையேறிய திமுக, அண்ணா முதல்வர்!
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு அனுமதி: அமெரிக்கா
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

