டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புமதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

பூக்கள் விலை திடீா் உயா்வு: ஒரு கிலோ மல்லிகை ரூ. 3,000-க்கு விற்பனை

கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மல்லிகை

Updated On :

சென்னை: கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மலா் சந்தைக்கு தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்தும் தினசரி பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து வகை பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ரூ. 1,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கும், ரூ. 600-க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 800-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ. 750, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட ஐஸ் மல்லி ரூ. 2,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ. 1,300-இல் இருந்து ரூ. 1,800, சாமந்தி ரூ. 60-இல் இருந்து ரூ. 100, பன்னீா்ரோஜா ரூ. 80-இல் இருந்து ரூ.160, சாக்லேட் ரோஜா ரூ.170-இல் இருந்து ரூ. 200, சம்பங்கி ரூ.140-இல் இருந்து ரூ.200, அரளிபூ ரூ.280-இல் இருந்து ரூ.400, தாழம்பூ ரூ.130-இல் இருந்து ரூ.250, ஒரு தாமரைப்பூ ரூ.10-இல் இருந்து ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விசேஷ நாள்கள் என்பதாலும், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டும் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளதாக கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.