கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழை.

Updated On :

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயிலின் தாக்கம் 100° டிகிரியை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.மேலும் வரும் ஐந்து நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென சூறாவளி காற்றுடன்

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தேவலாபுரம், வன்னியநாதபுரம், பைரபள்ளி, கீழ்மிட்டாளம், பாா்சனாப்பல்லி, வெங்கடசமுத்திரம், குமாரமங்கலம், கடாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.

மேலும்,பல கிராமங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி சாலையில் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி தண்ணீரில் நிந்தியபடி சென்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.