குளிர் காலத்தில் சரும வறட்சி, எரிச்சல்! என்ன செய்ய வேண்டும்?
குளிர் காலத்தில் அதிகமாக சரும வறட்சி ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு முறைகள் பற்றி...

கோப்புப் படம் - ENS
சாதாரணமாக குளிர் காலத்தில் சருமம் எண்ணெய்ப் பசை கொண்டதாகவும் நீர்ச்சத்து குறைந்தும் காணப்படும். இதனால் சருமம் பளபளப்பாக இருந்தாலும் இறுக்கமாக இருக்கும். குளிர் காலங்களில் சருமத்தில் நீர்ச்சத்து குறைவதால் எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள்கூட ஈரப்பதத்தை இழக்கலாம்.
சருமம் பலவீனமடையும்போது அது ஈரப்பதத்தை எளிதாக இழக்கிறது. இதனாலே சருமம் இறுக்கமாகவும் சொரசொரப்பாகவும் உணர்திறன்மிக்கதாகவும் மாறுகிறது.
2023-ல் ஸ்கின் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சருமத்தை சரிசெய்ய செராமைடு கொண்ட ஒரு கிரீம் இதனைச் சரிசெய்ய உதவும் என்று கண்டறியப்பட்டது.
எண்ணெய் பசை, முகப்பரு பாதிப்புள்ள சருமம் கொண்டவர்களுக்கு குளிர்காலம் வரும்போது சருமம் இறுக்கமாகிறது. இதனால் அழகு தயாரிப்பு க்ரீம்கள் பயன்படுத்தும்போது அது சருமத்தில் படிந்துவிடுகிறது. இது சருமத்தில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இதனால் சிலர் அதிகமாக ஃபேஸ் வாஷ் மற்றும் மாய்சரைசரைப் பயன்படுத்துவத்துவார்கள். சிலர் எண்ணெய் பசை இருப்பதால் மாய்சரைசரைப் பயன்படுத்துவதையே விட்டுவிடுவார்கள்.
மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவர் அனிஷா மெங்லே இதுபற்றி கூறுகையில், "சருமத்தில் வறட்சி ஏற்படும்போது அதற்கேற்ப க்ரீம்களுக்கு மாறுவது, எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய எக்ஸ்ஃபோலியேட்டிங் அமிலங்களைக் குறைப்பது என சருமப் பராமரிப்பு முறைகளை மாற்ற வேண்டும். சருமத்தில் இறுக்கம், செதில் உதிர்தல், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் சருமத்தில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும். இந்த பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தாத க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.
என்ன செய்ய வேண்டும்?
மென்மையாக சுத்தப்படுத்துங்கள்: சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு மென்மையான கிளென்சர்களைப் பயன்படுத்துங்கள். வெந்நீர், கடினமான க்ரீம் அல்லது சோப்புகள், அதிகமாக சருமத்தைக் கழுவுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
நீரேற்றம்: சருமத்திற்கு நீரை ஈர்க்கும் கிளிசரின், ஹைலூரோனிக் அமிலம் போன்ற ஈரப்பதமுள்ள தயாரிப்புகளைத் தேர்வு செய்யுங்கள்.
சருமப் பாதுகாப்பு: சருமப் பாதுகாப்புக்கு செரமைடுகள் உதவுகின்றன. இலகுவான க்ரீம் அல்லது ஜெல்-க்ரீம், எண்ணெய் சருமத்திற்கு சரியாக இருக்கலாம். அதேநேரம் எரிச்சல் உள்ள சருமத்திற்கு அடர்த்தியான க்ரீம்கள் தேவைப்படலாம்.
அமிலங்கள் வேண்டாம்: கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் அல்லது ரெட்டினாய்டுகள் உங்கள் சருமத்தில் எரிச்சலையோ அல்லது சரும உரிதலையோ ஏற்படுத்தினால், அவற்றைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், மேலும் எரிச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்: குளிர்காலத்திலும் எஸ்பிஎஃப் 30 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.
குடிநீர் - ஈரப்பதம்: உடலுக்குத் தேவையான நீர் மற்றும் நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது பொதுவான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆனால், சருமப் பாதுகாப்புக்கு நீர்ச்சத்துடன் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் க்ரீமும் முக்கியமானது.
Summary
Dry, irritated skin during the winter: what should you do?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


