பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: இன்று மட்டும் 3,752 பேருக்கு கரோனா உறுதி

மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக இன்று (வியாழக்கிழமை) 3,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் பலி 12,237 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3.6 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 334 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,237 -ஆக அதிகரித்துள்ளது.
 
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 12,881 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,66,946-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 7-ஆவது நாளாக பெரிய அளவில்12,881-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 
 
இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,60,384 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,94,325 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 52.79 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

பாகிஸ்தான்: 1.5 லட்சத்தை கடந்த பாதிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 1.5 லட்சத்தைக் கடந்தது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,839 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,54,760-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், அந்த நோய்க்கு ஒரே நாளில் 136 போ் உயிரிழந்ததாகவும் இதன் மூலம் நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 2,975-ஆக உயா்ந்துள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

மெக்ஸிகோ: ஒரே நாளில் 730 பலி

மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 730 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனா். இது, அந்த நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய கரோனா பலி எண்ணிக்கையாகும். அதுமட்டுமன்றி, அங்கு மேலும் 4,599 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இது, இரண்டாவது அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்தச் சூழலிலும், நாட்டில் தேவாலயங்களைத் திறக்கவும் பிற மத நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அனுமதிக்கப் போவதாக மெக்ஸிகோ அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூா்: மேலும் 247 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் மேலும் 247 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை அறிவித்தனா். புதிய நோயாளிகளில் பெரும்பாலானவா்கள் (இந்தியா உள்ளிட்ட) வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளா்கள் என்று அவா்கள் கூறினா். இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,216-ஆக உயா்ந்துள்ளது; கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 26-ஆக உள்ளது.

தாராவியில் புதிதாக 28 பேருக்கு கரோனா

தாராவியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 28 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: கேரளத்தில் 97, கர்நாடகத்தில் 210 பேருக்கு தொற்று

கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் இன்று (வியாழக்கிழமை) புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

சென்னையில் புதிதாக 1,373 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் புதிதாக 1,373 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 2,141 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,373

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாகலாந்தில் இன்று புதிதாக யாருக்கும் கரோனா இல்லை

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தனது டிவிட்டரில், மாநிலத்தில் 317 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக யாருக்கு தொற்று கண்டறியப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 193 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 90 பேர் சிகிச்சையில் உள்ளனர். 103 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தானில் கரோனா இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியது

அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,358 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,60,118-ஆக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த நோய்க்கு ஒரே நாளில் 118 போ் உயிரிழந்ததாகவும் இதன் மூலம் நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 3,093-ஆக உயா்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

கரோனா பாதிப்பு: முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிரிழப்பு

முதல்வர் அலுவலக தனிச்செயலர் தாமோதரன் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி றி உயிரிழந்தார். 
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கரோனா தொற்று பாதிப்பால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிகத்தில் மற்ற மாவட்டங்களை விட மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில் தான் நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அலுவலக தனிச்செயலர் தாமோதரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை தனிச்செயலர் தாமோதரன் உயிரிழந்தார்.  கரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் புதன்கிழமை மட்டும் 28 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். 

இந்தியாவில் பாதிப்பு 3,54,065; பலி 11,903 -ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,974 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,54,065-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து ஆறாவது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கரோனாவால் 2,003 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,903-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரில், 1,55,178 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,86,935 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். குணமடைந்தோரின் சதவீதம் 50 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஒரேநாளில் கரோனாவுக்கு 28 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 2,174 பேருக்கு தொற்று உறுதி; மேலும் 48 பேர் பலி

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,174 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 தமிழகம், மகாராஷ்டிரம், தில்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான செய்திக்கு..

 

கரோனா: ஜெர்மனியில் ஒற்றை இலக்கத்தில் பலி எண்ணிக்கை

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 378 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,674 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்த பலி; 385 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

தொடர்ந்து 5ஆவது நாளாக 10ஆயிரத்தைத் தாண்டிய இந்தியாவில் கரோனா பாதிப்பு

இதுகுறித்து மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,667 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் ஒட்மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில 380 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9900 பேர் பலியாகியுள்ளனர். 

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு தொற்று; பாதிப்பு 5.45 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,248 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,45,458 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் புதிதாக 919 பேருக்கு தொற்று: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 919 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 49 பேர் பலி

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 1,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் புதிதாக 4,443 பேருக்கு கரோனா பாதிப்பு; மேலும் 111 பேர் பலி

 பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,443 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,48,919 ஆக அதிகரித்துள்ளது.  விரிவான செய்திக்கு..

 

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனியின் மனைவி மற்றும் மகளுக்கு கரோனா தொற்று உறுதி

 கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற  உறுப்பினர் பழனியின் மனைவி மற்றும் மகள் உட்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விரிவான செய்திக்கு..

 

தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று இல்லை

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பரவல் அச்சம்: தில்லியைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி தற்கொலை

கரோனா பரவல் அச்சத்தினால் தில்லியைச் சேர்ந்த 56 வயது ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த பலி எண்ணிக்கை; நேற்று 382 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 382 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை எட்டும்

 இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் மற்றும் உயிா் காக்கும் சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்வு

 கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30ஆம் தேதியுடன் 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, கடந்த 24 மணிநேரத்தில் 11502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 1,647 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 1,647 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரம்: கடந்த 72 மணி நேரத்தில் 227 காவலர்களுக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக 227 காவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் புதிதாக 1,257 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 1,257 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,843 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 44 பேர் பலி

தமிழகத்தில் இன்று(திங்கள்கிழமை) புதிதாக 1,843 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜூன் 21, 28-ம் தேதிகளில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு

 சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜூன் 21, 28-ம் தேதிகளில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு

 சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தாராவியில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 25 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது: மருத்துவ வல்லுநர் குழு தகவல்

 தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது உச்சத்தில் உள்ளதாக முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ வல்லுநர் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். விரிவான செய்திக்கு..

தெலங்கானாவில் ஒரேநாளில் பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தெலங்கானாவில் ஒரேநாளில் பத்திரிகையாளர்கள் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com