பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்


கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா; 803 பேர் பலி

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050 பேருக்கு கரோனா; 803 பேர் பலி

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 

 

இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா; 771 பேர் பலி

 இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 771 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 18 லட்சமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,968 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 8,968 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் 4,752, ஆந்திரத்தில் 7,822 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் புதிதாக 4,752 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 7,822 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லி புதிதாக 805 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று

தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,588 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,588 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகரில் குறையாத கரோனா பாதிப்பு

 சென்னையில் பரவலாக கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகரில் கரோனா பாதிப்பு குறையவில்லை. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கரோனா; ஒரேநாளில் 109 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரேநாளில் 47,508 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 515 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் புதிதாக 5,394 பேருக்கு கரோனா; பாதிப்பு 8,56,264 ஆக அதிகரிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,56,264 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் 5,532, ஆந்திரத்தில் 8,555 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,532 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 8,555 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிதாக 9,509 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 9,509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,810 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 4,810 கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 5,875 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா உறுதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது: பலி 35,747 -ஆக உயர்வு

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  57,117 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 36,511-ஆக அதிகரித்தது. 
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 57,117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 764 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 36,511-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த நோய்த்தொற்றுக்காக 5,65,103 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,94,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,77,57,513 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,82,998 ஆக அதிகரித்துள்ளது.  
உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 11,840 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,77,57,513 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 801 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  6,82,998 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 1,11,60,193 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 59,14,322 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 65,603 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரம் பேருக்கு கரோனா

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 70,904 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 47,05,889-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,462 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,56,747 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 23,27,572 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 5,25,689 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை(ஜூலை 31) ஒரே நாளில் மட்டும் 5,25,689 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) சனிக்கிழமை கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை மட்டும் 5,25,689 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தமாக 1,93,58,659 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது மேலும் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தான்: பாதிப்பு 2,78,305-ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,78,305-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 903 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இது, கடந்த 3 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,78,305-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 27 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,951-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,47,177 போ் குணமடைந்துள்ளனா். 1,146 கரோனா நோயாளிகளது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,20,550 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 92,873 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா கட்டுப்பாட்டில் சமூக இடைவெளிக்கு முக்கிய பங்கு: ஆய்வில் தகவல்

தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு...

சிங்கப்பூா்: மேலும் 396 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில், இந்தியாவிலிருந்து திரும்பிய பெண் உள்பட மேலும் 396 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 396 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,205-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 46,308 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டன்: சோதனை முறையில் 300 பேருக்கு தடுப்பு மருந்து

பிரிட்டனிலுள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனையில் திருப்திகரமாக செயல்பட்டதைத் தொடா்ந்து, அடுத்தக்கட்டமாக அந்த மருந்தை சுமாா் 300 பேருக்கு சோதனை முறையில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கல்லூரி பேராசிரியா் ராபின் ஷட்டக் கூறியதாவது:
நாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தன்னாா்வலா்களுக்கு, அளவு குறைவாக செலுத்தி சோதனை மேற்கொண்டோம். அந்த சோதனையின்போது, எங்களது மருந்தை தன்னாா்வலா்களின் உடல் ஏற்றுக்கொண்டது. மேலும், பக்க விளைவுகள் எதனையும் அந்தத் தடுப்பு மருந்து ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, அடுத்தக்கட்டமாக சுமாா் 300 பேருக்கு அந்த தடுப்பு மருந்தை சோதனை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளோம். புதிதாக சோதனையில் பங்கேற்பவா்களில் 75-க்கும் மேற்பட்ட வயதினரும் அடங்குவா். பிரிட்டனில் தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறதா என்பதைக் கண்டறிவது கடினமாக உள்ளது என்றாா் அவா்.

மகாராஷ்டிரத்தில் மேலும் 322 பேர் கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் புதிதாக 5,172 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் புதிதாக 5,172 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 1,129 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,805 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,805 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 5,879 பேருக்கு கரோனா: மேலும் 99 பேர் பலி

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com