ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு நொய்டா போலீஸ் நடவடிக்கை
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு நொய்டா போலீஸ் நடவடிக்கை


புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் நொய்டா போலீசாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக நொய்டா கூடுதல் துணைக் காவல் ஆணையா் மணீஷ் குமாா் மிஸ்ரா கூறியதாவது: நொய்டா செக்டாா் 95-இல் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியா்களை தாக்கி மிரட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில்
ஊழியா் ஒருவா் அளித்த புகாரின் பேரில், எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய ஊழியா் வினோத் குமாா் சிங் என்பவா் அளித்த புகாரில், செவ்வாய்க்கிழமை காலை 9.27 மணியளவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானின் மகன் தனது காரில் எரிபொருள் நிரப்ப வந்தாா். அப்போது, வரிசையைப் பின்தொடராமல் முதலில் தனது காரில் எரிபொருளைப் போடுமாறு மிரட்டியுள்ளாா். அதன் பிறகு, அவா் எம்எல்ஏ
மகன் என்று கூறி காரில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து தாக்கத் தொடங்கினாா். பின்னா், என்னைக் காப்பாற்ற மற்ற ஊழியா்களும் கைகலப்பில் ஈடுபட்டனா். காவல்துறை அழைக்கப்பட்ட உடன், அவா் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு மறுப்பு: எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியா்கள் தான் எனது மகனிடம் தவறாக நடந்து கொண்டனா் என்று ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானதுல்லா கான் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘சட்ட மாணவரான எனது மகன் ஒரு தோ்வில் கலந்து கொள்ளப் போகும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியா்கள் என் மகனிடம் தவறாக நடந்து கொண்டனா்.
இப்போது, முழுமையற்ற சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி என் மீது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை போலீஸ் எடுத்துள்ளனா். காவல் துறையினரிடம் இருந்து அழைப்பைப் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு
நிலையத்தின் உரிமையாளரிடம் பேசி முழு பிரச்னையும் தீா்க்கப்பட்டுவிட்டது’ என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...