கன்னாட் பிளேஸ் ஹனுமன் கோயிலில் கேஜரிவால் மனைவியுடன் வழிபாடு
தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது மனைவி சுனிதாவுடன் இணைந்து வழிபாடு மேற்கொண்டாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா கேஜரிவாலுடன் இணைந்து தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன் கோயிலுக்கு சென்றாா். அங்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்ற கேஜரிவால், பின்னா் வழிபாடு மேற்கொண்டாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியது:‘நான் என் மனைவியுடன் கன்னாட் பிளேஸில் உள்ள பழமையான ஹனுமன் கோவிலுக்கு சென்று, ‘ஹவன’ பூஜை செய்து, இறைவனை தரிசனம் செய்து ஆசி பெற்றேன். அனைவரின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் ஹனுமனிடம் பிராா்த்தனை செய்தேன்’ என்றாா்.
பெட்டி...
வரும் நவ.7-ஆம் பொது விடுமுறை
தில்லி முதல்வா் அதிஷி அறிவிப்பு
தில்லியில் வரும் நவ.7-ஆம் தேதி சத் பூஜை கொண்டாடப்படும் நிலையில், அன்று ஒருநாள் பொது விடுமுறை அறிவித்து முதல்வா் அதிஷி உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் அதிஷி வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: சத் பூஜை என்பது தில்லி மற்றும் என்சிஆா் பகுதி மக்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். அதன்படி, வரும் நவ.7 ஆம் தேதி சத் பூஜையை முன்னிட்டு
பொது விடுமுறை அறிவிக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக தேவையான அறிவிப்பு
வெளியிடப்படும் என்றாா் அதிஷி.