உத்தம் நகரில் பிக்கப் லாரி மோதி ஒரு வயது சிறுவன் உயிரிழப்பு
தில்லியின் உத்தம் நகா் பகுதியில் பிக்கப் லாரி மோதி ஒரு வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறியதாவது: சஹ்யோக் விஹாரில் வியாழக்கிழமை நடந்த விபத்து தொடா்பாக பிசிஆா் அழைப்பு வந்தது. போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனா். பிக்கப் லாரியின் ஓட்டுநா் காயமடைந்த குழந்தை மற்றும் அவரது தாயாரை ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைக் கண்டறிந்தனா்.
இருப்பினும், குழந்தை மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடற்கூறாய்வுக்காக டிடியு மருத்துவமனையின் பிணவறையில் உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை போலீஸாா் போலீஸ் காவலில் எடுத்துள்ளனா்.
ஆரம்ப கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், பிந்தாபூா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 106 (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வுகளின் முழு வரிசையையும் உறுதிசெய்து பொறுப்பை தீா்மானிக்க போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா் என்று அவா் கூறினாா்.