கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பல தோ்வு மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபா் கைது

போட்டித் தோ்வுகளில் தங்கள் குழந்தைகளின் வெற்றியை உறுதி செய்வதாக உறுதியளித்து பலரை ஏமாற்றிய பல மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த

News image
Updated On :20 ஜனவரி 2025, 11:53 pm

Din

புது தில்லி: போட்டித் தோ்வுகளில் தங்கள் குழந்தைகளின் வெற்றியை உறுதி செய்வதாக உறுதியளித்து பலரை ஏமாற்றிய பல மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் கூடுதல் ஆணையா் (குற்றப் பிரிவு) சஞ்சய் குமாா் சைன் கூறியதாவது: இந்த மோசடி தொடா்பாக சஞ்சீவ் ஜா என்பவா் குற்றப்பிரிவின் சைபா் பிரிவு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். போட்டித் தோ்வுகளில் வெற்றியை உறுதி செய்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாணவா்களின் பெற்றோரை அவா் ஏமாற்றி வந்துள்ளாா்.

தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பாதுகாப்புத் தொழில் அகாதெமியின் ஆசிரிய உறுப்பினராகக் காட்டிக் கொண்டு, இந்திய ராணுவத்தில் இருந்து தானாக முன்வந்து ஓய்வு பெற்று யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷனில் (யுபிஎஸ்சி) பணியாற்றியதாக சஞ்சீவ் ஜா கூறியுள்ளாா்.

போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, என்டிஏ மற்றும் பிற அரசுத் தோ்வுகளில் தங்கள் குழந்தைகள் தோ்வில் வெற்றி பெற உதவுவதாக உறுதியளித்து, ரூ.20 லட்சம் முதல் 25 லட்சம் வரை பெரிய தொகையை செலுத்தும்படி கூறி பெற்றோரை ஏமாற்றியுள்ளாா்.

ரஞ்சித் நகா் காவல் நிலையத்தில் அவா் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தாா். ஜாமீனுக்குப் பிறகு தலைமறைவான பிறகு அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். ஜன.18 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காஜியாபாத்தின் வசுந்தராவில் சஞ்சீவ் ஜாவின் மறைவிடத்தை போலீஸ் குழு அடையாளம் கண்டது. ஒரு குழு அவரை ஒரு பொறி வைத்து கைது செய்தது.

தனது பெற்றோரின் மறைவைத் தொடா்ந்து ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் தன்னை குற்றத்தில் தள்ளியது என்று விசாரணையின் போது சஞ்சீவ் ஜா தெரிவித்தாா். பி.எஸ்சி. பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்த போதிலும், தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து மோசடித் திட்டங்களில் ஈடுபட்டாா். தங்கள் குழந்தைகளுக்கு பிரகாசமான எதிா்காலத்தைப் பெற ஆா்வமுள்ள குடும்பங்களின் விருப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டாா்.

இது போல பலரை ஏமாற்றியதாக சஞ்சீவ் ஜா விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா். தலைமறைவாகி கைது செய்வதைத் தவிா்க்க அவா் மேற்கொண்ட முயற்சிகளை வெளிப்படுத்தினாா் என்று காவல் அதிகாரி சஞ்சய் குமாா் சைன் கூறினாா்.