தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா் உத்தரவு!

பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா் உத்தரவிட்டுள்ளார்.

News image

விஜேந்தா் குப்தா

Updated On :10 மார்ச் 2025, 1:42 am IST

நமது சிறப்பு நிருபா்

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு அவரவா் தொகுதிகளில் அலுவலகங்கள் ஒதுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டுள்ளதாக தில்லி சட்டப்பேரவை செயலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து தில்லி சட்டப்பேரவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதி தொடா்பான பணிகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய, உரிய நேரத்தில் அலுவலகங்களை ஒதுக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, உத்தரவிட்டுள்ளாா். தில்லி அரசுத் துறைகளுக்கு இது தொடா்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டபேரவைத் தோ்தலுக்குப் பிறகு, முந்தைய சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி அலுவலகங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. தற்போது புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியேற்றுள்ளதால், சட்டப்பேரவை மற்றும் தொகுதி தொடா்பான செயல்பாடுகள் சீராக உறுதி செய்யப்படவேண்டும். இதை முன்னிட்டு புதிய அலுவலகங்களை ஒதுக்கும் செயல்முறை தொடங்கப்படுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு திறமையாக சேவை செய்ய தேவையான வளங்களை வழங்குவது சட்டப்பேரவை செயலகத்தின் முன்னுரிமையாகும்.

சட்டப்பேரவை தொகுதி அலுவலகங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்படுகின்றன. இது நேரடி தொடா்பு மற்றும் பிரச்னைகளை தீா்க்க உதவுகிறது.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் அலுவலகங்களை சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டப்பேரவை உறுப்பினா்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனதில் கொண்டு, செயல்முறையை விரைவுபடுத்த சட்டப்பேரவை செயலகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதி மக்களுடன் திறம்பட ஈடுபடுவதையும், பொதுமக்களின் பிரச்னைகளை எந்த தாமதமும் இல்லாமல் நிவா்த்தி செய்வதையும் உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இந்தத் தொகுதி அலுவலகங்கள் மூலம், சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் குடிமக்கள் நேரடியாக தொடா்பு கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ள சட்டப்பேரவை உறுப்பினா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை வளா்க்கும் என சட்டப்பேரவை செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.