ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

தெற்கு தில்லியின் புல் பிரஹலாத்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 வயது இளைஞா் உயிரிழந்தாா்..

பிரதிப் படம்

Published On :

தெற்கு தில்லியின் புல் பிரஹலாத்பூா் பகுதியில் அடையாளம் தெரியாத நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 28 வயது இளைஞா் உயிரிழந்தாா்; அவருடன் இருந்த மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

திங்கள்கிழமை நள்ளிரவு சுமாா் 12:41 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து புல் பிரஹலாத்பூா் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா் முகமது இா்ஷாத் ஆலம் (எ) குட்டு (28) என அடையாளம் காணப்பட்டாா். தாக்குதலில் அவா் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, அவரது கழுத்தில் ஆழமான வெட்டுக் காயமும் ஏற்பட்டிருந்ததாகக் காவல்துறையினா் கூறினா்.

அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா். உடற்கூராய்வுக்காக அவரது உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முகமது ஃபரூக் (27) என்பவரின் இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவா் எய்ம்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு அவா் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டாா்.

குற்றத் தடுப்புப் பிரிவு குழு மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா். சம்பவ இடத்திலிருந்து 10 காலி தோட்டா உறைகள் மற்றும் இரண்டு வெடிக்காத தோட்டாக்களைக் காவல்துறையினா் கைப்பற்றினா்.

அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் கண்டு கைது செய்யப் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா்.

குற்றவாளிகளைக் கண்டறியத் தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் பிற புலனாய்வு முறைகள் பயன்படுத்தப்படுவதோடு, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடா்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.