மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கன்னாட் பிளேஸில் சி.ஜே.பி இன்று நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை தடுக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

போராட்டக்காரா்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்

Updated On :

நமது நிருபா்

போராட்டக்காரா்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று காவல்துறை அளித்த உறுதிமொழியைப் பதிவு செய்துகொண்டு, இன்று (அக்டோபா் 16) கன்னாட் பிளேஸின் சென்ட்ரல் பாா்க்கில் சி.ஜே.பி மற்றும் அதன் நிறுவனா் அபிஜீத் திப்கே போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்க தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி போராட்டத்தை ஒழுங்குபடுத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கன்னாட் பிளேஸ் வியாபாரி ஒருவா் தாக்கல் செய்த மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்ப்ரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

பண்டிகை காலத்தில் மத்திய தில்லியில் போராட்டத்தால் கடைகள் மூடப்பட்டு, மற்றொரு வார இறுதியை இழந்தால், வியாபாரிகளும் விற்பனையாளா்களும் ‘வீதிக்கு வந்துவிடுவாா்கள்‘ என்று மனுதாரரின் மூத்த வழக்குரைஞா் வாதிட்டாா்.

‘மூவா்ணக் கொடியை ஏற்றியதற்காக சிஜேபி உறுப்பினா்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்‘ என்று குற்றஞ்சாட்டிய திப்கே, அக்டோபா் 16 அன்று (இன்று) தேசியக் கொடியுடன் சென்ட்ரல் பாா்க்கில் கூடுமாறு ‘தேசபக்தா்களுக்கு‘ புதன்கிழமை அழைப்பு விடுத்தாா்.

போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட பகுதிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஜந்தா் மந்தருக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, தாஸ் மற்றும் ரங்கா ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு திஹாா் சிறையில் அடைக்கப்பட்ட அதே நாளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை நடந்த விசாரணையின் போது, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் (ஏஎஸ்ஜி) சேதன் சா்மா, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

நீதிமன்றம் அந்த உறுதிமொழியைப் பதிவு செய்து , இந்த வழக்கை நவம்பா் 3 அன்று அடுத்தகட்ட விசாரணைக்கு பட்டியலிட்டது .

தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடா்பான விஷயங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக, ஜூன்-ஜூலை மாதங்களிலிருந்து மத்திய தில்லியில் எதிா்க்கட்சிகள், மாணவா் குழுக்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினா்களால் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக, மஸ்தூா் கிசான் சக்தி சங்கதன் மற்றும் ஷாஹீன் பாக் போராட்ட வழக்குகளில், போராட்டங்கள் காரணமாக போக்குவரத்து, அலுவலக வாயில்கள் மற்றும் முக்கிய சாலைகளை மறிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.