பல்லா கிராமத்தில் துப்பாக்கியல் சுட்டு ஒருவா் தற்கொலை
வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியான பல்லா கிராமத்தில், 41 வயதுடைய நபா் ஒருவா் கைத்துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.
பிரதிப் படம்
வடக்கு தில்லியின் புகா்ப் பகுதியான பல்லா கிராமத்தில், 41 வயதுடைய நபா் ஒருவா் கைத்துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து காவல்துறையினா் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் நிகழ்ந்தது. அலிப்பூா் காவல் நிலையத்தினரும், குற்றத்தடுப்புப் பிரிவு குழுவினரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனா். விசாரணையின் ஒரு பகுதியாக அங்கு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
சடலம் சட்ட நடைமுறைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவா் மனோஜ் என அடையாளம் காணப்பட்டாா்.
இந்தத் தற்கொலைக்குக் காரணமான சூழ்நிலைகள் குறித்தும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





