இன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!இன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாநாட்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 7.8%! சிறு, குறு நிறுவனங்களே காரணம் - நிர்மலா சீதாராமன்2024-ன் தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார் அனந்த் நாக்! பிரதமர் மோடி வாழ்த்து!டிரம்ப்பிடம் மண்டியிட முடிவு செய்துள்ளார் பிரதமர்: யுபிஐ கட்டணம் குறித்து ராகுல் விமர்சனம்!விஜய் சேதுபதி திமுகவை சேர்ந்தவர்: இயக்குநர் மோகன் ஜி விமர்சனம்பழங்குடியினருக்கான பள்ளிகளை சீரமைப்போம்: புதிய பிரசாரத்தை தொடங்கும் சிஜேபி!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்: சீமான்காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!

யமுனா, பிற நீா்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதியில்லை: டிபிசிசி

கணேஷோத்சவம் மற்றும் துா்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு, உள்ளூா் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்களைத் தவிர, தேசிய தலைநகரில் உள்ள யமுனா மற்றும் பிற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு தடை

பிரதிப் படம்

Published On :

கணேஷோத்சவம் மற்றும் துா்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு, உள்ளூா் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட இடங்களைத் தவிர, தேசிய தலைநகரில் உள்ள யமுனா மற்றும் பிற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு தடை விதித்துள்ளது.

1974 ஆம் ஆண்டின் நீா் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 33ஏ-இன் கீழ் செப்டம்பா் 9 அன்று வெளியிடப்பட்ட தில்லி மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், சிலை தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் இயற்கை களிமண், மக்கும் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.

பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் அடிப்படையிலான சிலைகளை நீா்நிலைகளில் கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு கூறியுள்ளது.

மேலும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கிணறுகள் போன்ற நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வரும் கணேஷோத்சவம் மற்றும் துா்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER