நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தடுமாறிவருகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நேற்று (அக்டோபர் 24) தொடங்கியது.
நியூசிலாந்து - 259/10
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சான்ட்னர்
அதன்படி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய கேப்டன் டக் அவுட்டாக, ஜெய்ஸ்வால் 6* ரன்களுடனும், ஷுப்மன் கில் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் இருவரும் நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 2 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் ஷுப்மன் கில் வெளியேற, அவருக்குப் பின்னர் வந்த விராட் கோலியும் சான்ட்னரின் சுழலில் சிக்கி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலி
அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் சரியாக சோபிக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும், முதலாவது டெஸ்ட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த், சர்ஃபராஸ் கான் இருவரும் முறையே 18 மற்றும் 11 ரன்களிலும், அஸ்வின் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது நாளில் முதலாவது செஸனில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்திய அணி 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது.
இந்திய அணி 38 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணித் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி நியூசிலாந்தைவிட 152 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அசத்தல்; கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி!

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழப்பு!

தோல்வியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற பென் ஸ்டோக்ஸ்!

கடைசி டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து!
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



