தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

இலங்கை டெஸ்ட்: ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு...

ஸ்டீவ் ஸ்மித் - ANI

Published On :9 ஜனவரி 2025, 10:57 am IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் நியமித்துளது.

ஜன.29 முதல் பிப்.6ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி இலங்கை செல்லவிருக்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான கடைசி போட்டிகளாகும்.

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸின் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ஷான் அப்பாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனோலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மேத் குஹ்னேமன், மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக விளையாடாத ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், இலங்கை தொடரிலும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.