திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

News image

பாகிஸ்தான் அணி வீரர்கள் - படம் | ஐசிசி

Updated On :8 ஜூலை 2025, 5:26 pm IST

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஆல்ரவுண்டர் ஷதாப் கான் இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

சல்மான் அகா (கேப்டன்), அப்ரார் அகமது, அகமது டேனியல், ஃபாஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஸமான், ஹாசன் நவாஸ், ஹுசைன் டாலட், குஷ்தில் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், சஹிப்ஸதா ஃபர்கான், சைம் ஆயுப், சல்மான் மிர்ஸா, சூஃபியன் முக்யூம்.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் விவரம்

முதல் டி20 - ஜூலை 20, டாக்கா

2-வது டி20 - ஜூலை 22, டாக்கா

3-வது டி20 - ஜூலை 24, டாக்கா

Summary

The Pakistan Cricket Board announced the Pakistan squad for the T20 series against Bangladesh today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.