முதல் டெஸ்ட்: அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

அறிமுகப் போட்டியிலேயே அரைசதம், சதம் விளாசி தென்னாப்பிரிக்க வீரர்கள் அசத்தியுள்ளனர்.
south african players
படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated on
1 min read

அறிமுகப் போட்டியிலேயே அரைசதம், சதம் விளாசி தென்னாப்பிரிக்க வீரர்கள் அசத்தியுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூன் 28) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தேநீர் இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடத் தவறினர். தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய லுஹான் பிரிட்டோரியஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

அதிரடியாக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். மற்றொரு அறிமுக வீரரான லுஹான் பிரிட்டோரியஸ் சதம் விளாசி அசத்தினார். தேநீர் இடைவேளையின்போது, அவர் 141 பந்துகளில் 128 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

summary

South African players have impressed, scoring half-century and century in their debut match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com