3-வது டி20: ஜேமி ஓவர்டன் அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜேமி ஓவர்டன் - படம் | AP
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று (நவம்பர் 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடியது.
ஜேமி ஓவர்டன் அபார பந்துவீச்சு; 108 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா!
முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சாம் ஹார்ப்பர் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 22 ரன்கள், நிகில் சௌதரி 19 ரன்கள், மிட்செல் ஓவன் 17 ரன்கள் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லியம் டாஸன் 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Summary
In the third T20 match against England, the Australian team batted first and was bowled out for 108 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


