மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டுகள்..! திணறும் ஆஸ்திரேலிய பேட்டர்கள்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி குறித்து...

Jamie Overton

ஜேமி ஓவர்டன் - படங்கள்: எக்ஸ் / இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

Updated On :

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் இன்று (நவ.27) மதியம் இந்திய நேரப்படி 1.45 மணிக்குத் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் 11, ஜேக் பிரேசர் மெக்கர்க் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஷாம் ஹார்பர்- நிகில் சௌதரி சற்று நிதானமாக விளையாடி 26, 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். பின்னர் வந்த டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், பென் துவார்சியஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

13 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

பந்துவீச்சு மட்டுமில்லாமல் ஃபீல்டிங்கிலும் ஓவர்டன் 2 கேட்ச் மூலமாக விக்கெட்டுகள் எடுக்க உதவியது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே ரசிகர்கள் ஓவர்டன் பங்களிப்புக்காக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய டி20 தொடரையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Summary

Jamie Overton takes 5 wickets..! Australian batters struggle!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.