நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

துலீப் கோப்பை: 2ஆவது இன்னிங்ஸிலும் இஷான் கிஷன் அதிரடி..! கிழக்கு மண்டலம் 584 ரன்கள் முன்னிலை!

துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் குறித்து...

Ishan Kishan

அரைசதம் அடித்த இஷான் கிஷன் - படம்: பிசிசிஐ டொமஸ்டிக்

Published On :

துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவில் கிழக்கு மண்டலம் அணி 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சென்னையில் சேப்பாக்கம் திடலில் செப்.6ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 163 ஓவர்களில் 708 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பி 336 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 99 ரன்கள் எடுத்தார். அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் கிழக்கு மண்டலம் நான்காம் நாள் முடிவில் 51 ஓவர்களில் 212/5 ரன்கள் குவித்துள்ளது.

இதன்மூலமாக, கிழக்கு மண்டல அணி 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாளான நாளை தென் மண்டல அணியினால் வெற்றி பெற முடியாது. முதல் இன்னிங்ஸில் லீட் அதிகமாக இருந்ததால் கிழக்கு மண்டலம் வெற்றி பெறவே அதிகமான வாய்ப்பிருக்கிறது.

கேப்டன் இஷான் கிஷன் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிகபட்சமாக 80 ரன்கள் குவித்தார். உள்ளூர் போட்டிகளில் தோல்வியே காணாத கேப்டனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Duleep Trophy: East Zone leads by 584 runs thanks to Ishan Kishan's explosive batting!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.