இஷான் கிஷனுக்கு என்ன அறிவுரை கூறினார் பொலார்ட்?

பொலார்ட் கூறிய அறிவுரை தனக்குப் பெரிதும் உதவியதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இஷான் கிஷனுக்கு என்ன அறிவுரை கூறினார் பொலார்ட்?

பொலார்ட் கூறிய அறிவுரை தனக்குப் பெரிதும் உதவியதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார்.

பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற போராடிக்கொண்டிருக்கும் மும்பை அணி, ராஜஸ்தானை வீழ்த்தி பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஷார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. எவின் லூயிஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். நாதன் கோல்டர் நைல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு விளையாடிய மும்பை 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 

சரியாக விளையாடாததால் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் நேற்றைய ஆட்டத்தில் இடம்பெற்று தொடக்க வீரராகச் சிறப்பாக விளையாடினார். தன்னுடைய ஆட்டம் பற்றி அவர் கூறியதாவது:

மும்பை அணியின் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சியாக உள்ளேன். வி பகுதியில் ரன்கள் எடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டோம். அதை பேட்டர்கள் சரியாகச் செய்துள்ளோம். மேடுகளும் பள்ளங்களும் ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையில் சகஜமாக ஏற்படும். கடந்த வருடப் போட்டி போல இந்த வருடம் பல பேட்ஸ்மேன்களால் நிறைய ரன்கள் எடுக்க முடியவில்லை. விராட் கோலி, ஹார்திக் பாண்டியா என்னிடம் ஊக்கமூட்டும் விதத்தில் பேசினார்கள். கிரோன் பொலார்டிடம் பேசினேன். ஆட்டத்தின் அணுகுமுறை எளிதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளச் சொன்னார். வழக்கமாக எப்படி விளையாடுவியோ அப்படியே விளையாடு. கடந்த வருடம் நீ ஆடிய ஆட்டத்தின் விடியோக்களைப் பார் என்றார். நானும் என்னுடைய விடியோக்கள் சிலவற்றைப் பார்த்து ஊக்கம் கொண்டேன். அடுத்த ஆட்டத்திலும் இதேபோல விளையாடி ஜெயிக்கவேண்டும். மீண்டும் நான் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com