யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நரைன் வலையில் சிக்கிய பெங்களூரு பேட்டர்கள்: கொல்கத்தாவுக்கு 139 ரன்கள் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2021, 3:43 pm

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் திங்கள்கிழமை விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் தேவ்தத் படிக்கல், விராட் கோலி களமிறங்கினர். ரன் குவிப்பதில் சிரமம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளத்தில் இருவரும் துரிதமாக ரன் குவிக்கத் தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்தது பெங்களூரு.

பவர் பிளேவின் கடைசி ஓவரின் முதல் பந்தில் படிக்கல்லை (21) போல்டாக்கி திருப்புமுனை உண்டாக்கினார் லாக்கி பெர்குசன். இதிலிருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது பெங்களூரு ரன் ரேட்.

10-வது ஓவர் வரை 1 பவுண்டரிகூட போகவில்லை. 10-வது ஓவரில் ஸ்ரீகர் பரத்தும் 9 ரன்களுக்கு சுனில் நரைன் சுழலில் வீழ்ந்தார்.

அதிரடிக்கு மாறத் திணறி வந்த கோலியும் (39 ரன்கள்), நரைன் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று போல்டானார். நரைன் அடுத்த ஓவரில் ஏபி டி வில்லியர்ஸையும் (11) போல்டாக்கி பெங்களூருவைக் கட்டுப்படுத்தினார். விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் கடைசியில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரையும் (15) நரைன் வீழ்த்தினார். இதனால், ஒருகட்டத்தில் 9, 8-க்கு மேல் இருந்த ரன் ரேட் ஓவருக்கு 7-க்குக் கீழ் குறைந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.