மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னாப்பிரிக்காவில் டி20 போட்டி: சிஎஸ்கே ஆர்வம்

தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு...

News image
Updated On :6 மே 2022, 8:16 am

DIN

தென்னாப்பிரிக்காவில் அடுத்த வருடம் தொடங்கவுள்ள டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட நான்கு ஐபிஎல் அணிகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

2023 ஜனவரியில் புதிய டி20 லீக் போட்டியைத் தொடங்கவுள்ளது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். சூப்பர் ஸ்போர்ட் ஊடகத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 33 ஆட்டங்கள். இதற்கு முன்பு 2017 முதல் 2019 வரை இரு டி20 போட்டிகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு அடுத்ததாக உலகின் 2-வது சிறந்த டி20 போட்டியாக இது உருவாக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது தெ.ஆ. கிரிக்கெட் வாரியம். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி கேபிடல்ஸ் மற்றும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தலைமையில் இயங்கும் ஒரு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் தெ.ஆ. டி20 போட்டியில் ஓர் அணியை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. ஐபிஎல் போட்டியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய சுந்தர் ராமன், இப்போட்டியில் 12.5% பங்குகளை வாங்கியுள்ளார். ஐபிஎல் அணிகளின் பங்களிப்பில் தெ.ஆ. டி20 போட்டி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளதால் இப்போட்டி நிச்சயம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.