முகப்பு விளையாட்டு ஐபிஎல்
இன்று மட்டும் சென்னையிடம் மும்பை தோற்றால்?: காத்திருக்கும் அபாயம்!
By DIN | Published On : 12th May 2022 09:26 AM | Last Updated : 12th May 2022 09:26 AM | அ+அ அ- |

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன.
11 ஆட்டங்களில் 2-ல் மட்டும் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி,11 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9-ம் இடத்தில் உள்ளது. பிளேஆஃப்புக்கான போட்டியில் இன்னமும் உள்ளது.
இதுவரை மும்பை அணி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால் எந்த ஒரு வருடமும் கடைசி இடத்தைப் பிடித்ததில்லை. 2009-ல் மட்டும் 7-ம் இடம் பிடித்தது. அதற்குப் பிறகு வேறு எந்த வருடமும் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை.
ஆனால் இந்த வருடம் அதற்கான அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
இன்று சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை தோற்றால் பிறகு அந்த அணிக்குக் கடைசி இடம் உறுதியாகிவிடும். மீதமுள்ள இரு ஆட்டங்களில் மும்பை வென்றாலும் சென்னை தோற்றாலும் கடைசி இடம் மும்பைக்கு தான். அதில் மாற்றம் இருக்காது.
இதுவரை எந்த ஒரு வருடமும் கடைசி இடத்தை மும்பை அணி பெறாததால் தற்போது குறைந்தபட்சம் அந்த நிலையையாவது தடுக்கலாம் என முயற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ரோஹித் தலைமையிலான அணி.
மும்பை இந்தியன்ஸ்: ஐபிஎல் லீக் சுற்று முடிவில்...
2008 - 5-ம் இடம்
2009 - 7-ம் இடம்
2010 - முதல் இடம்
2011- 3-ம் இடம்
2012 -3-ம் இடம்
2013 -2-ம் இடம் (சாம்பியன்)
2014 - 4-ம் இடம்
2015 - 2-ம் இடம் (சாம்பியன்)
2016 - 5-ம் இடம்
2017 - முதல் இடம் (சாம்பியன்)
2018 - 5-ம் இடம்
2019 - முதல் இடம் (சாம்பியன்)
2020 -முதல் இடம் (சாம்பியன்)
2021 - 5-ம் இடம்
2022 - ?