மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அதிக விக்கெட்டுகள்: சஹாலைப் பின்னுக்குத் தள்ளிய ஆர்சிபி வீரர்

இருவரும் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

News image
Updated On :14 மே 2022, 10:11 am

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஆர்சிபி அணி வீரர் ஹசரங்கா.

ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ரூ. 10.75 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. இதற்குத் தகுதியானவராகத் தன்னை அவர் நிரூபித்து வருகிறார். 

நேற்று, பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹசரங்கா. இத்தனைக்கும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 209 ரன்களைக் குவித்தும் ஹசரங்கா பந்துவீச்சில் ரன்கள் எடுக்க ராஜஸ்தான் பேட்டர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். 

இதையடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சஹாலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஹசரங்கா. இருவரும் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். சஹால் 12 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளும் ஹசரங்கா 13 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.  ஹசரங்கா எகானமி - 7.48, சஹால் எகானமி - 7.54.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.