சாம் கரண், லிவிங்ஸ்டன் அதிரடி: தில்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம் கரண்
சாம் கரண் படம் | AP

தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய நாளின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சண்டீகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்தது.

சாம் கரண்
திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான்: எரிக் சைமன்ஸ்

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். டேவிட் வார்னர் 29 ரன்கள் எடுத்தும், சாய் ஹோப் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கார் விபத்துக்குப் பிறகு குணமடைந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு விளையாடிய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அக்‌ஷர் படேல் அதிரடியாக 13 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் இறுதியில் அபிஷேக் போரெல் 10 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) விளாசி அசத்தினார். இறுதியில் தில்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரபாடா, ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சஹார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சாம் கரண்
ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியைப் பாராட்டிய முன்னாள் வீரர்!

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். தவான் 22 ரன்களிலும், பேர்ஸ்டோ 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய பிரபசிம்மன் சிங் 26 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் கிங்ஸ் 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்க, சாம் கரண் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.

லியம் லிவிங்ஸ்டன்
லியம் லிவிங்ஸ்டன் படம் | AP

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடித்து அவர் பஞ்சாப் கிங்ஸுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

சாம் கரண்
இதனை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: ஷிவம் துபே

இறுதியில் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டிய பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேப்பிடல்ஸை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com