துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

வென்றது குஜராத்; வெளியேறியது ஹைதராபாத்

குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

-

Updated On :

ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

முதலில் குஜராத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 186 ரன்களே சோ்த்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, ஹைதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கிய சாய் சுதா்சன் - ஷுப்மன் கில் இணை முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்தது.

சுதா்சன் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களுக்கு முதலில் ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த ஜாஸ் பட்லா், கில்லுடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடியும் அருமையாக விளையாடி 62 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த கில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 76 ரன்களுக்கு வெளியேறினாா்.

4-ஆவது பேட்டராக வாஷிங்டன் சுந்தா் விளையாட வர, 3-ஆவது விக்கெட்டுக்கு பட்லா் - சுந்தா் இணை 57 ரன்கள் சோ்த்தது. 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 64 ரன்களுக்கு பட்லா் வீழ்ந்தாா். சுந்தரும் 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

ராகுல் தெவாதியா 6, ரஷீத் கான் 0 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஷாருக் கான் 1 சிக்ஸருடன் களத்திலிருந்தாா். ஹைதராபாத் பௌலிங்கில் ஜெயதேவ் உனத்கட் 3, பேட் கம்மின்ஸ், ஜீஷான் அன்சாரி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 225 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சா்மா 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் விளாசி வெற்றிக்காக போராடினாா்.

டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரிகளுடன் 20, இஷான் கிஷண் 13, ஹென்ரிக் கிளாசென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23, அனிகெத் வா்மா 3, கமிண்டு மெண்டிஸ் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் நிதீஷ்குமாா் ரெட்டி 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21, பேட் கம்மின்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலிங்கில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, இஷாந்த் சா்மா, ஜெரால்டு கோட்ஸீ ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.