கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆசிய கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய மகளிர் அணி

ஜப்பானில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதியில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

News image
பந்தை கடத்திச் சென்று கோலடிக்கும் முயற்சியில் இந்திய வீராங்கனை.
Updated On :2 நவம்பர் 2017, 7:45 pm

DIN

ஜப்பானில் நடைபெற்றுவரும் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதியில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய வீராங்கனை குர்ஜித் கௌர் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்டம் தொடங்கிய 
2-ஆவது நிமிடத்திலேயே கஜகஸ்தான் வீராங்கனை வேரா தொமாஷ்நெவா "ஃபீல்ட்" கோல் அடித்து இந்திய வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு, தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொண்ட இந்திய அணிக்கு, நான்காவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் முதல் கோல் கிடைத்தது.
இந்தியாவின் குர்ஜித் கௌர் அடித்த அந்த கோலால், ஆட்டம் 1-1 என சமநிலை ஆனது. அதைத் தொடர்ந்து உற்சாகமான வீராங்கனைகள் மிகச் சிறப்பான தடுப்பாட்டம் ஆடி எதிரணிக்கு கோல் வாய்ப்புகளை வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்நிலையில், 16-ஆவது நிமிடத்தில் உருவான பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் தீப் கிரேஸ் கோல் அடித்தார். அதன்தொடர்ச்சியாக இந்திய அணியின் நவ்னீத் கௌர் ஆட்டத்தின் 21 மற்றும் 27-ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் பதிவு செய்தார். இதன்மூலம், ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
2-ஆவது பாதி ஆட்டத்தில் கஜகஸ்தான் முன்னிலை பெற முயற்சித்து வந்த நிலையில், 41-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திய தீப் கிரேஸ் அணியின் 5-ஆவது கோலை பதிவு செய்தார்.
அதன்தொடர்ச்சியாக 42 மற்றும் 56-ஆவது நிமிடங்களில் தொடர்ந்து கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளைக் கொண்டு ஹாட்ரிக் கோலை பதிவு செய்தார் குர்ஜித் கெளர். இறுதிவரை கஜகஸ்தானுக்கு வேறு கோல் வாய்ப்புகள் வழங்காத இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.