காமன்வெல்த் போட்டிக்குத் தேர்வு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்: வீராங்கனை சகினா
காமன்வெல்த் போட்டிக்கு என்னைத் தேர்வு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என பாரா பளு தூக்கும் வீராங்கனை சகினா கதுன் அறிவித்துள்ளார்.


காமன்வெல்த் போட்டிக்கு என்னைத் தேர்வு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என பாரா பளு தூக்கும் வீராங்கனை சகினா கதுன் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் பாரா காமன்வெல்த் போட்டி ஏப்ரல் 4 முதல் 15 வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்குபெறக் கூடிய பளு தூக்கும் வீரர்களின் பட்டியலில் சகினா கதுனின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து தன் பெயரைச் சேர்க்காததற்காகப் போராட முடிவெடுத்துள்ளார் சகினா.
இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது: என் பெயரைப் பட்டியலில் சேர்ப்பார்கள் என இன்னமும் காத்திருக்கிறேன். கடைசிவரை நான் போராடுவேன். அப்போதும் என் பெயரைச் சேர்க்காவிட்டால் பிறகு நான் நீதிமன்றத்தை நாடுவேன். ஏனெனில் என் வாழ்க்கையை அவர்கள் பாழாக்கி விட்டார்கள். இதை நான் விடமாட்டேன். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்பு தற்கொலை செய்வதாக இருந்தாலும் நான் அதற்குத் தயங்கமாட்டேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
28 வயது சகினா, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். ஆசிய அளவிலான தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ளார். காமன்வெல்த் கேம்ஸுக்குச் செல்லும் வீரர்களின் பட்டியலில் சகினாவின் பெயரையும் சேர்க்குமாறு பாராலிம்பிக்ஸ் கமிட்டி ஆஃப் இந்தியாவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. எனினும் இதுவரை அவருடைய பெயர் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து சகினா மேலும் கூறியதாவது: கடந்த நான்கு வருடங்களாக இப்போட்டிக்காகக் காத்திருக்கிறேன். இதற்காகக் கடுமையாகப் பயிற்சி செய்துள்ளேன். இப்போது நான் பயிற்சி மேற்கொள்வதா அல்லது இப்பிரச்னைக்காகப் போராடுவதா எனத் தெரியவில்லை. நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பிரதமர் இப்பிரச்னையில் தலையிடவேண்டும். மனமுடைந்திருந்தாலும் நான் பயிற்சி மேற்கொண்டுவருகிறேன். இதற்குப் பிறகும் தேர்வு செய்யாவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்பு தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...