ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பரபரப்பான ஆட்டத்தில் தமிழகத்தை வீழ்த்திய மும்பை! அஸ்வின் 3 விக்கெட்டுகள்!

மிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசியில் 2 விக்கெட் வித்தியாசத்தில்...

News image
Updated On :8 பிப்ரவரி 2018, 12:19 pm

எழில்

தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அஸ்வின் 41 ரன்களும் ஜெகதீசன் 31 ரன்களும் எடுத்தார்கள். இதர தமிழக வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் தமிழக அணி 49.3 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தவல் குல்கர்னி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

எளிதான இலக்கு என்றாலும் தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை. அந்த அணி 48.5 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுபம் ரன்ஜனே 59 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். தமிழக அணியின் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கே.விக்னேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.