இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?: ரோஹித் சர்மாவின் நீக்கம் குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி!

உண்மையில் தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?...

News image
கோப்புப்படம்
Updated On :1 அக்டோபர் 2018, 8:39 am

எழில்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடன் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் சோபிக்காத நிலையில் தேர்வுக் குழு அவரை நீக்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம்,ஆசிய கோப்பை என தொடர்ந்து விளையாடி வரும் பந்துவீச்சளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும், ரோஹித் சர்மாவுக்கும் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை.

இந்தத் தேர்வு குறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு இடமில்லை. உண்மையில் தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது இதன் விஷயம் தெரியுமா? தெரிந்தாலும் சொல்லுங்கள் ஏனெனில் என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.