இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2 ரன்களுக்கு சுருண்டது பஞ்சாப்: சூப்பர் ஓவரில் தில்லி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 7:13 am

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 

தில்லி கேபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. ஆட்டத்தின்போது பஞ்சாப் அணி 2-வது பேட்டிங் பிடித்ததால், சூப்பர் ஓவரில் அந்த அணி முதல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், பூரனும் களமிறங்கினர். தில்லி அணிக்கு ரபாடா பந்துவீசினார்.

முதல் பந்தில் 2 ரன்கள் கிடைக்க, 2-வது பந்தை பவுன்சராக வீசினார். அதை தூக்கி அடிக்க முயன்ற ராகுல் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 3-வது பேட்ஸ்மேனாக மேக்ஸ்வெல் களமிறங்கினார். ஆனால், ஸ்டிரைக்கில் இருந்த பூரன் 3-வது பந்தில் போல்டானார். இதனால், பஞ்சாப் அணி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தில்லியின் வெற்றிக்கு 3 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தில்லி அணிக்கு ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். முதல் பந்தில் பந்த் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த பந்தை ஷமி வைடாக வீச வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அடுத்த பந்தில் பந்த் 2 ரன்கள் எடுக்க தில்லி அணி எளிதாக வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.