சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்டும் டிரா!

ஆட்ட நாயகனாக பிராத்வெயிட்டும் தொடர் நாயகனாக லக்மலும் தேர்வானார்கள். 

News image
தொடர் நாயகன் விருது வென்ற பிராத்வெயிட்
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டும் டிரா ஆகியுள்ளது. இதனால் 0-0 என டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் 2-வது டெஸ்ட், நார்த் சவுண்டில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 354 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராத்வெயிட் கடைசி வீரராக 126 ரன்களில் ஆட்டமிழந்தார். கார்ன்வால் 73 ரன்கள் எடுத்து லக்மல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை அணித் தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளும் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. திரிமானே 55 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிராத்வெயிட் 85 ரன்கள் எடுத்தார். 

இலங்கை அணி 2-வது டெஸ்டில் வெற்றி பெற 377 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 5-ம் நாள் முடிவில் இலங்கை அணி 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதனால் 2-வது டெஸ்டும் டிரா ஆனது. இதனால் டெஸ்ட் தொடர் 0-0 என சமனில் முடிந்துள்ளது. ஆட்ட நாயகனாக பிராத்வெயிட்டும் தொடர் நாயகனாக லக்மலும் தேர்வானார்கள். 

மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை மே.இ. தீவுகள் அணி 2-1 என வென்றது. அந்த அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. தற்போது டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.